அதிக நேரம் ஒரே இடத்தில் இருந்து வேலை பாக்குறீங்களா? ஆராய்ச்சில் அதிர்ச்சி தகவல்!

United States of America India World
By Swetha Nov 22, 2024 12:30 PM GMT
Report

நீண்ட நேரம் அமர்ந்து இருப்பவர்களுக்கு என்னென்ன நோய் உண்டாகும் என்று தகவல் வெளியாகியிள்ளது.

ஆராய்ச்சி தகவல்

அமெரிக்காவில் உள்ள காலேஜ் ஆஃப் கார்டியாலஜியின் ஜர்னல் சார்பாக ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 90,000 பேர் ஈடுப்படுத்தப்பட்டனர். அதில் நீண்ட நேரம் இடைவேளையின்றி ஒரே இடத்தில் அமர்ந்திருப்பது இதய நோய்க்கு வழிவகுக்கும் என தெரியவந்துள்ளது.

அதிக நேரம் ஒரே இடத்தில் இருந்து வேலை பாக்குறீங்களா? ஆராய்ச்சில் அதிர்ச்சி தகவல்! | Sitting For So Long Can Cause These Health Problem

இந்த ஆய்வு குறித்து கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியரான டாக்டர். கீத் டயஸ் தெரிவிக்கையில், “அதிகமாக உட்காருவது ஆரோக்கியத்துக்கு மிகவும் மோசமானது. இருப்பினும், இதுப்பற்றி தெரிந்து கொள்ள கூடுதல் ஆராய்சிகள் தேவை" என்றார்.

அதிக நேரம் ஒரே இடத்தில் இருந்து வேலை பாக்குறீங்களா? ஆராய்ச்சில் அதிர்ச்சி தகவல்! | Sitting For So Long Can Cause These Health Problem

மேலும், இது குறித்து கூறும் மருத்துவர்கள் “உடற்பயிற்சி செய்தாலும் இதில் இருந்து தப்ப முடியாது” எனக்கூறுகின்றனர். உடல் அசைவுகள் மிகவும் முக்கியம் எனவும், அடிக்கடி சிறுது நேரம் இடைவேளை எடுப்பது நல்லது எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இந்த நிலையில், ஒருவர் நிமிர்ந்து நிற்கும்போது பட்சத்தில், இதயம் மற்றும் இருதய அமைப்புகள், குடல்களின் செயல்பாடு போன்றவை திறம்பட இருக்கும். இதனால் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஆனால் அதிக நேரம் உட்கார்ந்திருப்பது பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

நீரிழிவு நோய் வர முக்கிய காரணம் நாம் சமைக்கும் முறையா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீரிழிவு நோய் வர முக்கிய காரணம் நாம் சமைக்கும் முறையா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

இதயநோய்

ஒரு வாரத்தில் 23 மணி நேரத்திற்கும் மேலாக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு இதய நோய்களால் இறக்கும் ஆபத்து 64 சதவீதம் அதிகம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

நீண்ட நேரம் உட்கார்ந்தே இருந்தால், மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயம் 147 சதவீதம் அதிகம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 நீரிழிவு நோய்

ஒருவர் ஐந்து நாட்கள் படுத்தப்படி ஓய்வில் இருந்தாலே உடலில் இன்சுலின் எதிர்ப்பு அதிகரித்துவிடும்.

அதேபோல, அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே இருப்பவர்களுக்கும் இன்சுலின் அதிகம் சுரப்பதால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 112% அதிகம் என்று கூறப்படுகிறது.

புற்றுநோய்

நுரையீரல், கருப்பை மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் என சில வகையான புற்றுநோய்கள் உண்டாக காரணம் அதிக நேரம் உட்கார்வதாக இருக்கிறக்கலாம்.

கழுத்து மற்றும் கால் வலி

கணினியில் அதிக நேரம் செலவழித்தால், கழுத்து மற்றும் தோள்களில் வலி மற்றும் விறைப்பு ஏற்படும். நரம்பு ரத்த உறைவு (DVT) , கணுக்கால் வீக்கம் போன்றவை ஏற்படும்.

மன ஆரோக்கியம்

உட்கார்ந்தே இருப்பது, மன ஆரோக்கியத்துக்கும் தீங்கு விளைவிக்கும். கவலை மற்றும் மனச்சோர்வு ஆகிய இரண்டும் உருவாகும் ஆபத்தும் அதிகமாகும்.