தொழிற்துறை வளர்ச்சியில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது - நிர்மலா சீதாராமன் பேச்சு
தமிழகம் தொழிற்துறை வளர்ச்சியில் முதன்மை மாநிலமாக விளங்குவதாக நிர்மலா சீதாரமன் தெரிவித்துள்ளார். தி.மு.க., சொந்த நலன் பற்றி மட்டுமே கலலை கொள்கிறது. அது தன்னுடைய தோல்விகளை மறைக்க முயற்சி செய்கிறது. பெட்ரோல் என்பது முற்றிலும் இறக்குமதி செய்யக்கூடியது.
தொழிற்துறை வளர்ச்சியில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது அதுமட்டுமல்லாது சூரிய ஒளியை பயன்படுத்துவதிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. தி.மு.க.,வும் காங்கிரசும் ஜல்லிக்கட்டுவை தடை செய்தது. பா.ஜ., அரசு அமைந்த பின்னர் தான் அவை மீண்டும் கொண்டுவரப்பட்டது.
திமுகவும் காங்கிரசும் வாரிசுகளை கொண்ட கட்சிகள்., பா.ஜ.,ஒன்றும் வட இந்திய மாநில கட்சி அல்ல. பிரதமர் மோடி அரசால் வெளி நாட்டு முதலீடு பெருகி உள்ளது.பல்வேறு துறைகளில் தனியார்கள் வரவேற்கப்படுகின்றனர். தமிழகத்தில் ராணுவதொழிற்சாலைகள் அமைக்கப்பட உள்ளன.