சீதாராம் யெச்சூரியின் மகன் கொரோனாவுக்கு பலி

sitaram yechury Ashish Yechury
By Fathima Apr 22, 2021 03:15 AM GMT
Report

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மகன் ஆஷிஷ் யெச்சூரி சிகிச்சை பலனின்றி காலமானார்.

கொரோனா தொற்றுக்கு ஆளாகி டெல்லியிலுள்ள குருகிராம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆஷிஷ் யெச்சூரி, இன்று (ஏப்.22) காலமானார்.

இத்தகவலை உறுதி செய்துள்ள சீதாராம் யெச்சூரி, கொரோனா தொற்றால் இன்று காலை எனது மகன் ஆஷிஷ் யெச்சூரி உயிரிழந்ததை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

எனது மகனை கண்காணித்த மருத்துவர்கள், செவிலியர்கள், முன்களப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உடன் இருந்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.