மகளை காதலித்த இளைஞர்..பழிவாங்க சகோதரியை பாலியல் வன்கொடுமை - கொடூரத்தின் உச்சம்!
மகளை காதலித்த இளைஞனின் சகோதரியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் நடந்துள்ளது.
சகோதரி
உத்தரப் பிரதேசம் கோரக்பூரைச் சேர்ந்தவர் ரவீந்தர் சிங். இவரது மகள் அப்பகுதியில் வசித்து வந்த பஞ்சாபை சேர்ந்த இளைஞனை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் ரவீந்தருக்கு தெரிய வர அவர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இந்த சூழலில், சிங்கின் எதிர்ப்பை மீறி கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் புது வாழ்வைத் தொடங்க ஊரைவிட்டு சென்றுள்ளனர். இதனால் ஆத்திரத்தில் இருந்த ருந்த ரவீந்தர் சிங், அவரது தம்பி வீரேந்தர் சிங், மகன் அமன் சிங் மற்றும் உறவினர் சந்தோஷ் சிங் ஆகிய நால்வருமாக சேர்ந்து,
பாலியல் வன்கொடுமை
கடந்த மே மாதம் பஞ்சாபில் அந்த இளைஞனின் சொந்த ஊரான லூதியானாவுக்கு சென்றுள்ளனர். அங்கு அந்த வீட்டில் தனது மகளை இழுத்துச்சென்ற இளைஞனின் சகோதரி இருந்த நிலையில் அவரை ரவீந்தர் அவரது தம்பி, மகன், உறவினர் என நால்வருமாக சேர்ந்து இளைஞனின் சகோதரியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
அதை வீடியோவும் எடுத்து, வெளியே சொன்னால் வீடியோவை ரிலீஸ் செய்துவிடும் என்று மிரட்டியுள்ளனர். இதனால் கடந்த 3 மாதகங்களாகப் பயத்திலும், வேதனையிலும் இருந்த இளைஞனின் சகோதரி தற்போது இந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.
இந்த கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதையடுத்து, அவர்கள் நால்வர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த பாலியல் வன்கொடுமைக்கு ஆளான இளைஞனின் சகோதரி இரண்டு குழந்தைகளுக்கு தாய் என்பது குறிப்பிடத்தக்கது.