தங்கையை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய அண்ணன் : சென்னையில் பகீர் சம்பவம்
சென்னை இராயபுரத்தில் தங்கையை பாலில் உறவு வைத்து கர்ப்பம்மாக்கிய அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவொற்றியூர் காந்தி தெரு ராமகிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்த 15 வயதுடைய பள்ளி சிறுமி, சென்னை இராயபுரம் MC ரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
தங்கையை கர்ப்பமாகிய அண்ணன்
கடந்த 10 தேதி இரவு சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரது தாய் சிறுமியை அழைத்து கொண்டு இராயபுரம் பகுதியில் உள்ள அரசு ஆர். எஸ். ஆர். எம். மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்று அனுமதித்துள்ளார்.
சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கர்ப்பமாக இருப்பதாக சிறுமியின் தாயிடம் தெரிவித்த போது அதிர்ச்சியடைந்தார்.
பாலியல் வன்கொடுமை
இதனையடுத்து சிறுமியிடம் விசாரித்த போது கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூர் காலடிப்பேட்டை கோமாதா நகர் பகுதியில், ஏற்கனவே இருந்த வாடகை வீட்டில் வசித்து கொண்டு இருந்த போது சிறுமியின் சித்தி மகன் (19) முகேஷ் காதலித்து வந்ததாகவும் மூன்று முறை தன்னுடன் உடலுறவு வைத்து கொண்டதாகவ்ய்ம் தெரிவித்தார்.
போலீஸ் வலைவீச்சு
சிறுமியின் தாய் சிறுமியின் வயிறு எதற்கு இப்படி பெரியதாக இருக்கு என்று கேட்க்கும் போது சரியாக சாப்பிடாமல் இருப்பதால் வயிறு தொப்பை போடுவதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று மாலை சிறுமிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து அரசு ஆர் எஸ். ஆர். எம் மருத்துவமனை மூலம் திருவெற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள முகேஷை தேடி வருகின்றனர்