என்னுடைய காதலை வீட்டுல ஏத்துக்கல... அக்காவை சரமாரியாக குத்தி..கொன்ற தங்கை..
காதலை ஏற்காததால் அக்காவை கத்தியால் குத்தி கொன்றேன் என்று பரபரப்பு வாக்குமூலம் அளித்து இருக்கிறார் தங்கை.
இந்த சம்பவம் கேரளாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்துள்ள பரவூர் பகுதியை சேர்ந்தவர் சிவானந்தன்.
இவர் மனைவி ஜிஜி. இந்த தம்பதிகளுக்கு விஸ்மயா, ஜித்து என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 21 ந்தேதி சிவானந்தன், அவர் மனைவி இருவரும் வெளியே சென்றுள்ளனர்.
இளைய மகள் ஜித்துவிற்கு உடல்நிலை பாதிப்பு உள்ளதால் வீட்டில் உள்ள அறையில் மகள் கைகள் இரண்டையும் கட்டி படுக்கையில் போட்டு விட்டு, தாய் தந்தையர் இருவரும் வெளியில் சென்றிருந்தனர்.
மூத்தமகள் விஸ்மயா தங்கையை பார்த்துக் வீட்டில் கொண்டு இருந்தார்.
இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த போது , வீட்டுக்குள் மூத்த மகள் விஸ்மயா உடல் கருகி கிடப்பதைக் அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் பரவூர் போலீஸ் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து ஜித்துவை தேடி வந்தனர் , தேடுதலின் போலீஸ் போது பரவூர் அடுத்துள்ள காக்க நாடு பகுதியில் சுற்றித்திரிந்த ஜித்துவை பரவூ போலிசார் நேற்று கண்டுபிடித்தனர்.
போலீசிடம் பிடிபட்ட ஜித்துவிடம் நடத்திய விசாரணையில், ‘கைகள் வீட்டில் கட்டப்பட்ட நிலையில் இருந்தேன். அப்போது கைகள் எனது கட்டுகளை அவிழ்க்க அக்காவிடம் கூறினேன்.
அக்கா விஸ்மயா கை கட்டுகளை அவிழ்த்து விட்டார். அப்போது எனது காதலை அக்கா கெடுத்து விட்டதாக கூறி அக்காவிடம் சண்டை போட்டேன், என்னிடம் அவளும் சண்டை போட்டாள்.