உல்லாசத்திற்கு மறுப்பு தெரிவித்த கொளுந்தியாள் - அக்கா கணவன் செய்த கொடூர செயல்!
கொளுந்தியாளை கல்லால் தாக்கி உயிருடன் புதைத்த நபர் சிக்கியுள்ளார்.
தகாத உறவு
தருமபுரி, புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அனுமந்தன்(40). இவரது மனைவி முனியம்மாள். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் முனியம்மாளின் தங்கை ராஜேஸ்வரி, அனுமந்தனின் தம்பி முறை உறவு கொண்ட பிரபு என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜேஸ்வரிக்கும் அக்காவின் கணவர் அனுமந்தனுக்கும் கடந்த சில ஆண்டுகளாக திருமணத்தை மீறிய தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி வந்தனர். இந்நிலையில், தளவாய் அள்ளி கிராம பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரட்டு பகுதிக்கு தனிமையில் வருமாறு ராஜேஸ்வரியை அழைத்துள்ளார் அனுமந்தன். ராஜேஸ்வரியும் தனது இரு சக்கர வாகனத்தில் கரட்டுப் பகுதிக்கு சென்று தனிமையில் சந்தித்துள்ளார்.
பெண் கொலை
சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாற ஆத்திரம் தலைக்கேறிய அனுமந்தன் மச்சினிச்சியை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அருகில் இருந்த பள்ளத்தில் அவரை தள்ளி விட்டுள்ளார். பின் தான் ஒட்டி வந்த டிராக்டரில் இருந்த மண்ணை அந்த பளத்தில் கொட்டி மயக்கத்தில் இருந்த ராஜேஸ்வரியை உயிருடன் புதைத்திருக்கிறார்.
தொடர்ந்து அங்கிருந்தவர்கள் இதனை கவனித்த நிலையில் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஜேசிபி உதவியுடன் அந்த இடத்தை தோண்டி எடுத்த போது ராஜேஸ்வரி இறந்த நிலையில் இருந்துள்ளார்.
பின் அங்கிருந்து தப்பிச்சென்று வீட்டில் பதுங்கி இருந்த அனுமந்தனை சுற்றி வளைத்து பிடித்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.