கணவரோடு இருந்த கள்ளக்காதலை கைவிட சொன்ன அக்கா..கழுத்தை நெரித்துக் கொன்ற தங்கை
கணவரோடு இருந்த கள்ளக்காதலை கைவிட வற்புறுத்திய கர்ப்பிணி அக்காவை கழுத்தை நெரித்து கொலை செய்த தங்கை கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பேளகொண்டப்பள்ளி கிராமத்தின் அருகே உள்ள தைலந்தோப்பில் கடந்த திங்களன்று (ஏப்ரல் 26) கைகள் கட்டப்பட்டு உடல் அழுகிய நிலையில் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.. உயிரிழந்தவர் யார் என தெரியாத நிலையில், மத்திகிரி போலிசார் மேற்க்கொண்ட தீவிர விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளன.
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த ராகுல்(30), தனது மனைவி ஏலா(24) மற்றும் மனைவியின் தங்கை தமன்னா(20) ஆகிய மூவரும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒசூர் அடுத்த பேளகொண்டப்பள்ளி பகுதிக்கு வந்து வாடகை வீட்டில் வசித்து தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்துள்ளனர்.
ராகுலின் மனைவி ஏலா கர்ப்பமாக இருந்ததால் அவர் மட்டும் வீட்டிலிருக்க ராகுலும், தமன்னாவும் ஒன்றாக வேலைக்கு சென்றுவந்தபோது இருவருக்கிடையே நெருக்கம் அதிகரித்து கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதை அறிந்த ஏலா, தனது கனவரையும் தங்கையையும் பலமுறை கண்டித்துள்ளார்.
அப்போது ராகுல் இருவருடன் சேர்ந்து வாழ்வதாக கூறியதையும் ஏலா மறுத்து சண்டையிட்டு வந்துள்ளார். ஒருக்கட்டத்தில் ஏலாவின் கண்டிப்பு கணவர் ராகுலையும் தங்கை தமன்னாவையும் கோபமடைய செய்ததால், இருவரும் சேர்ந்து ஏலாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்து கடந்த 21 ஆம் தேதி இரவு ஏலாவை தாக்கிய இருவரும் அவரின் கைகளை கட்டி கழுத்தை நெரித்து கொலை செய்து அருகே உள்ள தைதலந்தோப்பில் வீசியதும் துர்நாற்றம் வீசிய பின்னர் அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
மேலும் கர்ப்பிணியான ஏலா அஸ்ஸாமிற்கு சென்று விட்டதாக கூறி ராகுலும், தமன்னாவும் சேர்ந்து வசித்து வந்துள்ளனர்.
இதனால் ராகுல் வீட்டருகே உள்ளவர்கள் சந்தேகத்தின் பேரில் போலீசாருக்கு கொடுத்த தகவலின்படி மத்திகிரி போலிசார் விசாரணை தொடங்கியபோது ராகுல் தலைமறைவாகி உள்ளார்.
அஸ்ஸாம் செல்வதற்காக தயாராகிக்கொண்டிருந்த தமன்னாவை மடக்கிய போலீசார், அவர்களது ஸ்டைலில் நடத்திய விசாரணையில் கொலை செய்தது தெரியவந்தது. ஏலாவின் உடல் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் பிரேத பரிசோதனை மேற்க்கொண்டதில் அவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்ததும், வயிற்றில் இருந்து சிசு ஆண் எனவும் தெரியவந்தது.
தமன்னாவை கைது செய்த போலீசார் தலைமறைவாக உள்ள ராகுலை தேடி வருகின்றனர்.