அக்காவுடன் பெட்ஷீட்டுக்காக சண்டை.. கோபத்தில் தங்கை எடுத்த விபரீத முடிவு!
அக்காவுடன் பெட்ஷீட்டுக்காக சண்டைபோட்ட தங்கை தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள சாமராஜ் பேட்டை பகுதியில் தனது பெற்றோர் மற்றும் அக்காவுடன் வசித்து வருபவர் ஷ்ரவ்யா. இவருக்கு வயது 19. ஷ்ரவ்யா அங்குள்ள தனியார் கல்லூரியில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 18 ஆம் தேதி அவரது அக்காவுடன் ஷ்ரவ்யா பெட்ஷீட்டுக்காக சண்டை போட்டுள்ளார். இதனால் அக்கா மற்றும் தங்கைக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்ட பெற்றோர் இருவரையும் சமாதானம் செய்து தூங்கவைத்துள்ளனர். இதனால் ஷ்ரவ்யா மன உளைச்சலில் இருந்ததாகத் தெரிகிறது. இந்த சுழலில் நேற்று காலை ஷ்ரவ்யா தனது அறையின் கதவைப் பூட்டியிருந்ததால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவை உடைத்துப் பார்த்துள்ளனர்.
தற்கொலை
அப்போது ஷ்ரவ்யா தூக்குப் போட்டு தற்கொலை செய்துள்ளதைப் பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.