இடிபாடுகளில் சிக்கி 17 மணி நேரம் தம்பியுடன் பாசப்போராட்டம் நடத்திய 7 வயது சிறுமி

Turkey Syria Turkey Earthquake
By Thahir 1 மாதம் முன்
Report

துருக்கியில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கிய அக்கா - தம்பியை பாதுகாத்தபடி இருந்த வீடியோ காட்சிகள் வெளியாகி காண்போரை நெகிழ வைக்கிறது.

துருக்கி - சிரியாவை பந்தாடிய பூகம்பம் 

காசியாடெப் அருகே 17.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. காசியாடெப் என்ற நகரம் துருக்கின் தென் கிழக்கிலும், சிரியாவின் எல்லையையொட்டி அமைந்துள்ளது.

sister-and-brother-trapped-in-the-rubble

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் துருக்கியின் ஹரமனமராஸ் மாகாணம் எல்பிஸ்டன் மாவட்டத்தில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவானது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியது

இதை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த பயங்கர நிலநடுக்கத்தால் துருக்கி - சிரியா நாட்டில் பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.பலர் படுகாயம் அடைந்தனர்.

துருக்கி - சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9500 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலி அணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

sister-and-brother-trapped-in-the-rubble

இந்த நிலையில் இடிபாடுகளில் சிக்கியுள்ளோர்களை மீட்கும் பணியானது இரவு பகலாக நடந்து வருகிறது. மேலும் இடிபாடுகளில் இருந்து உயிரிழந்தவர்களின் உடல்களும் மீட்கப்பட்டு வருகிறது.

அக்கா - தம்பியின் பாசப் போராட்டம் 

இதனிடையே ஒரு குடும்பத்தில் தாய் இல்லை என்றால் தனது தம்பிகளை அம்மா ஸ்தானத்தில் இருந்து பாதுகாப்பவள் தான் அக்கா அத்தகைய ஸ்தானத்தில் இருந்து இடிப்பாடுகளில் சிக்கி இருந்த அக்கா - தம்பியின் பாசப் போராட்டம் குறித்த வீடியோ தான் வைரலாகி வருகிறது.

sister-and-brother-trapped-in-the-rubble

10 மாடி அடுக்கு கட்டிடம் ஒன்றில் சிக்கி பலியான நபர்களின் உடல்களை போலீசார் ஒன்று ஒன்றாக அகற்றி வந்துள்ளனர். அப்போது கட்டிடம் ஒன்றிற்கு கீழ் சிறுமி ஒருவர் தனது தம்பியுடன் சிக்கியபடி இருந்துள்ளார்.

அப்போது அந்த சிறுமி தம்பியின் தலையின் மேல் கை வைத்தப்படி பாதுகாப்பாக 17 மணி நேரம் இருந்துள்ளார். தன் உயிர் போனாலும் தனது தம்பியின் உயிர் போக கூடாது என கேடயமாக இருந்துள்ளார்.

17 மணி நேரத்திற்கு பின் மீட்க வந்த மீட்பு படையினரை புன்னகையுடன் வரவேற்றார். 7 வயது சிறுமி தனது 4 வயது தம்பிக்கு பாதுகாப்பு அரணாக நின்று பெரிய மனுஷி போன்று அஞ்சாமல் தனது தம்பியை பொறுப்பாக காப்பாற்றியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.     

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.