கணவனை சுத்தியால் அடித்து கொலை செய்த பெண் : மகனும் உடந்தையாக இருந்ததால் அதிரடி கைது!

Attempted Murder
By Swetha Subash May 14, 2022 12:55 PM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனை அடித்து கொலை செய்து தீயிட்டு நாடகமாடிய மனைவி மற்றும் மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழமூவர்கரை மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(45). இவருக்கும் வசந்தா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்று ரூபன்(22), ரூபா(17), குகன் (16) உள்ளிட்ட இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர்.

சக்திவேல் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தினந்தோறும் குடிபோதையில் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சக்திவேல் மர்மமான முறையில் தீயிலிட்டு எரிந்த நிலையில் வீட்டின் அறையில் இறந்து கிடந்துள்ளார்.

இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் மனைவி வசந்தாவிடம் விசாரித்துள்ளனர். அப்பொழுது வசந்தா தன்னிடம் தகராறு செய்துவிட்டு கணவன் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொண்டதாக கூறியுள்ளார். அதனை நம்பிய ஊர் மக்கள் இன்று காலை இறந்த சக்திவேலின் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்திருந்தனர்.

கணவனை சுத்தியால் அடித்து கொலை செய்த பெண் : மகனும் உடந்தையாக இருந்ததால் அதிரடி கைது! | Sirkazhi Man Murdered By Wife And Son Over Abuse

அதைத் தொடர்ந்து இன்று காலை இறந்த சக்திவேலின் உடலை கிராமத்தில் உள்ள சுடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர். இதனை அறிந்த கிராம நிர்வாக அலுவலர் புகழ்வேந்தன் சக்திவேலின் இறப்பின் மீது சந்தேகம் இருப்பதாக சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக்கிற்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் இடுகாட்டில் அடக்கம் செய்ய இருந்த சக்திவேலின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருவெண்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவனை சுத்தியால் அடித்து கொலை செய்த பெண் : மகனும் உடந்தையாக இருந்ததால் அதிரடி கைது! | Sirkazhi Man Murdered By Wife And Son Over Abuse

இதனிடையே போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மனைவி வசந்தா நடத்தையில் சந்தேகப்பட்டு சக்திவேல் குடிபோதையில் அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி வசந்தா சக்திவேலை சுத்தியலால் தலையில் அடித்து கொலை செய்து அதனை மறைப்பதற்கு வீட்டில் இருந்த துணிகளை இறந்த சக்திவேல் மீது போட்டு மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து அறையின் கதவை மூடி உள்ளதும்,

தாய் கொலை செய்ததை மறைத்து மகன் ரூபன் தந்தை உடலை அடக்கம் செய்ய முயற்சி செய்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து தாய் மகன் இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட கணவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கீழமூவர்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.