பசுமாட்டின் காதுகள், வாலை அறுத்த கொடூர அரக்கர்கள் – ரத்த வெள்ளத்தில் அலறி ஓடிய பரிதாபம்
சீர்காழி அருகே வயிலில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை பிடித்து காது, வாலை அறுத்து வீசிய கொடூரர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, அண்ணாதுரையின் என்பவரின் மாடு, அதே கிராமத்தை சேர்ந்த ரவி, மன்மதன், சுபாஷ், கார்த்திக் உள்ளிட்டோருக்கு சொந்தமான வயலில் மேய்ந்து வருவதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
அண்ணாதுரை எவ்வளவு சொல்லியும் அந்த மாடு அவர்களின் வயலிலேயே தொடர்ந்து மேய்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், மாட்டை பிடித்து அரிவாளால் இரண்டு காதுகள் மற்றும் வாலை கொடூரமாக வெட்டியுள்ளனர்.
இதனால் ரத்த வெள்ளத்தில் மிதந்த அந்த பசுமாடு அலறி அடித்து ரத்த சொட்ட சொட்ட அங்கும் இங்கும் ஓடியது. இதனை கண்ட மாட்டின் உரிமையாளர்கள் கண்ணீர் வெள்ளத்தில் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மாட்டுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, குற்றவாளிகளை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Brain Teaser Maths: சிந்திப்பால் எதையும் தாங்கும் சக்தி கொண்டவரால் தீர்க்க முடியும் புதிர் உங்களால் முடியுமா? Manithan

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
