தெறிக்கவிடலாமா.. தெலுங்கில் அஜித்தாக களமிறங்கும் சிரஞ்சீவி: முக்கிய அப்டேட்
தமிழில் வெற்றிப்பெறும் படங்கள் சமீபகாலமாக மற்ற மொழிகளில் ரீமேக்காகி வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. தமிழில் சிறுத்தை சிவா, அஜித் கூட்டணியில் வெளியாகி ஹிட் ஆன ‘வேதாளம்’ திரைப்படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது.
தெலுங்கு ரீமேக்கில் மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார். இப்படத்தை மெஹர் ரமேஷ் என்பவர் இயக்குகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த படத்தின் டைட்டிலை சிரஞ்சீவியின் பிறந்தநாளையொட்டி படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இந்த படத்திற்கு ‘ஃபோலா ஷங்கர்’ என பெயரிடப்பட்டுள்ளது.
தற்போது இந்தப் படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகியுள்ளது. வரும் நவம்பர் 11-ம் தேதி காலை 07.30 மணிக்கு இந்தப் படத்தின் பூஜை நடைபெறுவதாகவும், அதையடுத்து நவம்பர் 15-ம் தேதி முதல் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது சிரஞ்சீவி கொரட்டலா சிவா இயக்கத்தில் ‘ஆச்சார்யா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.