வரலாற்று சாதனைப் படைத்த சிராஜ்- வாயடைத்துப்போன இந்திய அணி

ENGvIND MohammedSiraj kapildev
By Petchi Avudaiappan Aug 17, 2021 08:22 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

 இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

போட்டியை டிரா செய்ய இங்கிலாந்து அணி போராடிய நிலையில் கடைசி நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முகமது சிராஜ் முக்கிய பங்கு வகித்தார்.

இப்போட்டியின் 2 இன்னிங்ஸிலும் தலா 4 விக்கெட்டுகளை சிராஜ் வீழ்த்தியிருந்தார். இதன் மூலம் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரே போட்டியில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய 2வது இந்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஏற்கனவே முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவ் 1982 ஆம் ஆண்டு 8 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். அந்த சாதனையைப் 38 ஆண்டுகளுக்குப் பிறகு சிராஜ் தொட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.