சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை - அதிர்ச்சியில் ரசிகர்கள்

Chennai Death Siragadikka Aasai
By Sumathi Dec 12, 2025 07:55 AM GMT
Report

சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி தற்கொலை செய்துகொண்டார்.

 நடிகை ராஜேஸ்வரி

'சிறகடிக்க ஆசை' உள்ளிட்ட பல மெகா தொடர்களில் நடித்து வந்தவர் நடிகை ராஜேஸ்வரி. சென்னை பிராட்வேயைச் சேர்ந்த இவர், , சதீஷ் என்பவரைக் காதலித்து 24 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்தார்.

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை - அதிர்ச்சியில் ரசிகர்கள் | Siragadikka Aasai Serial Actres Rajeshwari Suicide

இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கணவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நிலையில், கடந்த சில நாட்களாக இவர்களுக்குள் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ராஜேஸ்வரி கணவரிடம் கோபித்துக்கொண்டு மறுநாள் காலை சைதாப்பேட்டையில் உள்ள தன் தாய் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.

தற்கொலை 

அங்கு கடந்த மூன்று நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த அவர், அளவுக்கு அதிகமான ரத்த அழுத்த மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

29 வருட குடும்ப வாழ்க்கை; விவாகரத்து காரணம் இதுதான் - ஏ.ஆர்.ரகுமான் ஓபன் டாக்!

29 வருட குடும்ப வாழ்க்கை; விவாகரத்து காரணம் இதுதான் - ஏ.ஆர்.ரகுமான் ஓபன் டாக்!

இந்தச் சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் சைதாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மறைவுக்கு திரை பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.