அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொன்ன பிரபலம் - சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை செய்த அந்த செயல்!

Sumathi
in பிரபலங்கள்Report this article
சீரியல் நடிகை ப்ரீத்தா அட்ஜெஸ்ட்மெண்ட் பிரச்சனை குறித்து பேசியுள்ளார்.
நடிகை ப்ரீத்தா
விஜய் டிவியில் முன்னணி இடத்தில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் சிறகடிக்க ஆசை. இதில் ஸ்ருதி என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை ப்ரீத்தா.
இந்நிலையில், இவர் அளித்த பேட்டி ஒன்றில், என்னிடம் அட்ஜஸ்ட்மெண்ட் செய்தால்தான் நடிக்க முடியும் என்று சொன்ன நபருக்கு நான் இப்போது சாதித்து காட்டி பதிலடி கொடுத்திருக்கிறேன்.
அட்ஜெஸ்ட்மெண்ட்
அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி பேசிய நபர் என்னை சமூக வலைதளத்தில் ஃபாலோ பண்ணிக் கொண்டுதான் இருந்திருக்கிறார். என்னுடைய வளர்ச்சியை பார்த்துக் கொண்டுதான் இருந்திருக்கிறார்.
நான் சமீபத்தில் தான் அவரை பிளாக் செய்தேன். அட்ஜஸ்ட்மென்ட் இல்லை என்றால் எதுவும் செய்ய முடியாது என்று என்னிடம் சொன்ன நபர் இன்று என்னுடைய திறமையின் மூலமாக எனக்கு இருக்கும் ரசிகர்களை பார்த்து இருப்பார் எனத் தெரிவித்துள்ளார்.