தமிழகத்தில் SIR பணிகள் இன்றுடன் நிறைவு

By Fathima Feb 10, 2026 03:51 AM GMT
Report

தமிழகத்தில் SIR பணிகள் இன்றுடன் நிறைவு பெறவுள்ளன.

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் கடந்தாண்டு டிசம்பர் 19ம் தேதி வெளியானது.

இதில் நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், போதுமான ஆவணங்கள் அளிக்காமல் இருந்தவர்கள், இறந்தவர்களின் பெயர்கள் உட்பட லட்சக்கணக்கான நபர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.

தமிழகத்தில் SIR பணிகள் இன்றுடன் நிறைவு | Sir Work Finished In Tamilnadu

இதில் ஆட்சேபம் தெரிவிக்க ஜனவரி 30 தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது, இதுவரையிலும் சுமார் 34 லட்சம் பேர் மறுபரிசீலனைக்காக விண்ணப்பித்துள்ளனர்.

உரிய ஆவணங்களை அளிக்காத சுமார் 12 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், ஆவணங்களை பெற்று விசாரணையை முடிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது, இதற்கான காலகொடு இன்றுடன் முடிகிறது.

தொடர்ந்து பிப்ரவரி 17ம் தேதி திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் SIR பணிகள் இன்றுடன் நிறைவு | Sir Work Finished In Tamilnadu