இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியாகிறது
தமிழகத்தில் கடந்தாண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது, அதில் 5.43 கோடி பேர் இடம்பெற்றிருந்தனர்.
மொத்தமாக 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன.
உயிரிழந்த வாக்காளர்கள் 26 லட்சத்து 95 ஆயிரத்து 672 பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 ஆயிரத்து 881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3 லட்சத்து 98 ஆயிரத்து 278 பேர் என கணக்கிடப்பட்டது.

உரிய ஆவணங்களுடன் பெயரை சேர்க்க காலக்கெடு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
இந்நிலையில் நாளை இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்துள்ளார்.
