ஐபிஎல் போட்டியில் கொடிகட்டி பறந்த பாஜகவின் மானம் - #ஒத்த_ஓட்டு_பாஜக ஹேஸ்டேக் ட்ரெண்டிங்

ipl2021 CSKvKKR SingleVoteBJP
By Petchi Avudaiappan Oct 15, 2021 04:21 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

துபாயில் நடைபெறும் ஐபிஎல் இறுதி ஆட்டத்தில் #ஒத்த_ஓட்டு_பாஜக  என்ற ஹேஸ்டேக்கோடு ரசிகர் ஒருவர் பங்கேற்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சமீபத்தில் நடந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலோடு சேர்த்து கோவை மாவட்டத்தில் 13 உள்ளாட்சி பதவிகளுக்கு  இடைத்தேர்தல் நடைபெற்றது.இதில் பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியம் குருடம்பாளையம் ஊராட்சி 9ஆவது வார்டு உறுப்பினருக்கான பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்ட பாஜக வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் கார்த்திக் ஒரே ஒரு வாக்கை மட்டுமே பெற்றார்.

இதனால் சமூக வலைத்தளங்களில்  #ஒத்த_ஓட்டு_பாஜக என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டானது. இந்நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனின் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டி இன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடரஸ் அணிகள் மோதும் இப்போட்டியில் ரசிகர் ஒருவர் #ஒத்த_ஓட்டு_பாஜக என்ற ஹேஸ்டேக் பதாகையோடு பங்கேற்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.