எங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட தொற்று இல்லை: வடகொரியா
தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என தொடர்ந்து வடகொரியா கூறி வருகிறது. உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் கொரோனாவின் 2வது மற்றும் 3வது அலைகள் படுமோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தங்களது நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என வடகொரியா தெரிவித்துள்ளது.
இத்தகவலை நம்ப மறுத்துள்ள உலக சுகாதார நிறுவனம், வடகொரியாவில் மோசமான சுகாதார கட்டமைப்பு நிலவுவதால் வைரஸ் பரவல் இருக்கும் என்றும், வடகொரியா தகவலை கூற மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கிடையே உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதி எட்வின் சால்வடார், கொரோனா பரிசோதனை செய்ததற்கான முடிவுகளையும் உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்க மறுக்கிறது.
எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூற அரசு மறுப்பதாக தெரிவித்துள்ளார்.