ஆஸ்திரேலிய சாலையில் கிடந்த ஏலியன்? ஒற்றைக் கண், நீண்ட தும்பிக்கையுடன் வித்திர உயிரினம் - விஞ்ஞானிகள் ஆராய்ச்சி
ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. விடாமல் வெளுத்து வாங்கும் மழையால் விஸ்மோல் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. இந்த கனமழைக்கு இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.
தற்போது கனமழை படிப்படியாக குறைந்துவிட்டது. ஆங்காங்கே வெள்ளநீர் குறைந்து வருகிறது.
இந்நிலையில், சிட்னியின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் வடிந்துள்ளனர். மாரிக்வில்லே பகுதியில் காலையில் ஜாக்கிங் சென்ற ஹாரி ஹேய்ஸ் என்பவர் சாலையில் ஒரு வித்தியாசமான உயிரினத்தை பார்த்துள்ளார்.
இந்த உயிரினம் முட்டை வடிவில் காணப்படுகிறது. ஒரே ஒரு கண்ணும், யானைக்கு இருப்பது போல தும்பிக்கை இருந்துள்ளது.
இது பார்ப்பதற்கு ஏதோ வித்தியாசமான உயிரினம் போல் இருந்தது. உடனே, கீழே கிடந்த இந்த உயிரினத்தை ஒரு குச்சியால் ஹாரி அசைத்துப் பார்த்தார். ஆனால், அந்த உயிரினம் அசையாமல் இருந்தது.
இதனையடுத்து, அந்த உயிரினத்தை வீடியோவாக எடுத்து சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட ஹாரி, சாலையில் கண்டேன்.. இது என்ன? என்று கேட்டுள்ளார்.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் நிறைய பதில்கள் கொடுத்து வருகின்றனர். நிறைய பேர் இது ஏலியன்தான் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இந்நிலையில், இந்த உயிரினம் குறித்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.