சிங்கிள் டோஸ் தடுப்பூசி ...ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி!
இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியினை அவசரகாலத்திற்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா தடுப்பூசிகளை தயாரிக்கும் நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் தான் தயாரித்த கொரோனா தடுப்பூசிகளை உலக நாடுகள் பலவற்றுக்கும் வழங்கிவருகின்றது.
இந்த நிலையில் ஜான்சன் நிறுவனம் தாங்கள் உருவாகிய கொரோனா தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டு அங்கீகரிக்க கோரி மத்திய அரசிடம் நேற்று விண்ணப்பித்திருந்தது. ஜான்சன் & ஜான்சன் ஒரே ஒரு டோஸ் போட்டுக்கொள்ளும் வகையில் அதன் தடுப்பூசியை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.
India expands its vaccine basket!
— Mansukh Mandaviya (@mansukhmandviya) August 7, 2021
Johnson and Johnson’s single-dose COVID-19 vaccine is given approval for Emergency Use in India.
Now India has 5 EUA vaccines.
This will further boost our nation's collective fight against #COVID19
இந்த நிலையில், இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கியது மத்திய அரசு. 4 தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்ட நிலையில், தற்போது 5வதாக ஒரு டோஸ் போட்டுக்கொள்ளும் வகையில் தயாரித்துள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் உள்ளிட்ட 5 தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜான்சன் நிறுவனத்திற்கும் அனுமதிவழங்கப்பட்டுள்ளது.