டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் போலீஸ் தடியடி.. பதற்றத்தில் தலைநகர்

india protest farmer
By Jon Jan 29, 2021 04:18 PM GMT
Report

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கடந்த 2020 நவம்பா் 26 ஆம் தேதி காஜிப்பூா், சிங்கு, டிக்ரி எல்லைப் பகுதிகளில் விவசாயிகள் போராடி வருகின்றனா். டெல்லி உத்தரப்பிரதேச மாநில எல்லையான காஜிப்பூரில் நடைபெற்று வரும் விவசாயிகளை போராட்டத்தை முடித்துக் கொண்டு சாலையை காலி செய்ய வேண்டும் என்று காஜியாபாத் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்துள்ளனா். இதனைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதல் அங்கு ஆயிரக்கணக்கான போலீஸாரும், துணை ராணுவப் படை வீரா்களும் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

தற்கொலை செய்து கொள்வோமே தவிர. இடத்தை காலி செய்ய முடியாது என்று போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவுக்குள் விவசாயிகள் இடத்தை காலி செய்யாவிட்டால், அவா்கள் பலப்பிரயோகம் செய்து அப்புறப்படுத்தப்படுவாா்கள் என்று சொல்லப்படுகிறது.

போராட்டம் நடைபெறும் இடத்தில் மின்சாரம் மற்றும் குடிநீா் விநியோகத்தை மாவட்ட நிா்வாகம் துண்டித்ததுள்ளது. இந்நிலையில் இன்று போராட்டம் நடைபெற்று இடத்தில் நுழைந்த மர்மகும்பல் விவசாயிகள் மீது கற்களைக் கொண்டு தாக்கியும் அவர்களுடைய கூடாரத்தை கலைக்கவும் முற்பட்டது.

டெல்லி எல்லையான சிங்குவில் விவசாயிகள் போராடும் இடத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தினர். பிரச்னை எழுந்ததை அடுத்து காவலர்கள் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசி தடியடி நடத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.