இவ்வளவு சீக்கிரமா...வழக்கில் திருப்பம்; பாடகர் வேல்முருகன் கைதான வேகத்தில் அடுத்த அதிரடி!
பாடகர் வேல்முருகன் கைது செய்யப்பட்ட உடனே ஜாமினில் வெளியே வந்திருக்கிறார்.
வேல்முருகன்
தமிழ் சினிமாவில் நாட்டுப்புற, கிராமத்து பாடல்களை பாடி பெரும் பிரபலமடைபவர்கள் ஒரு சிலரே. அவர்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார் வேல்முருகன். ஆடுகளம் படத்தில் வரும் "ஒத்த சொல்லல" இவருக்கு ஒரு மணிமகுடம் என்றே சொல்லலாம்.
சுப்ரமணியபுரம் படத்தில் வரும் "மதுர குலுங்க குலுங்க" பாடலை படி தமிழ் சினிமாவில் அறிமுகமான வேல்முருகன் அதனை தொடர்ந்து பல பாடல்களை பாடியுள்ளார். ஜேம்ஸ் வசந்தன், யுவன், அனிருத், இமான், தமன், வித்யாசாகர் என பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ள வேல்முருகன் எண்ணற்ற விருதுகளையும் வென்றுள்ளார்.
வழக்கில் திருப்பம்
இந்த நிலையில், இவர் சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெறும் இடத்தில், காரில் வந்த போது, மெட்ரோ அதிகரிக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.இந்த வாக்குவாதத்தின் போது மெட்ரோ நிலைய அதிகாரியை வேல்முருகன் தாக்கிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் பாடகர் வேல்முருகனை இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து, போலீஸார் பாடகர் வேல்முருகனை எச்சரித்து, கடிதம் எழுதி வாங்கிக்கொண்டு அவரை காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர். ஏற்கனவே, வேல்முருகன் இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விமான நிலையத்தில் மதுபோதையில் விமான நிலைய ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.