வாணி ஜெயராம் இறப்புக்கு காரணம் இதுதான் : காவல்துறை விளக்கம்

Death Vani Jairam
By Irumporai 1 மாதம் முன்
Report

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இதுவரை பாடிய பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் நெற்றியில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

 வாணி ஜெயராம் மரணம்

அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ள நிலையில், இந்த மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

பிரேத பரிசோதனை வெளியானது

அதே சமயம் வாணியின் வீடு பணிப்பெண் மலர் கொடி செய்தியாளர்களிடம் பேசும் போது வாணிஜெயராம் தரையில் இறந்து கிடந்ததாகவும் அவரது நெற்றியில் காயம் இருந்ததாகவும் கூறியதால் பரபரப்பு அதிகமான நிலையில் இந்த நிலையில், முதற்கட்ட பிரேத பரிசோதனை முடிவில் வாணி ஜெயராமின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணத்தினால் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

படுக்கைக்கு அருகில் இருந்த 2 அடி உயர மேசை மீது அவர் விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், நெற்றியிலும், மேசையில் விளிம்பிலும் ரத்தக்கறைகள் இருந்தது என்று தடவியல் நிபுணர் சோதனையில் உறுதிசெய்யப்பட்டு உள்ளது.

மேலும், சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்ததில், அவரது வீட்டிற்கு சந்தேகப்படும்படி யாரும் சென்றதற்கான அடையாளங்கள் இல்லை என்றும் தெரியவந்துள்ளது. அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரை பிரபலங்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

மதியம் 2 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது. அவரது உடல் சென்னை, பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்படவுள்ளது  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.