அவர் ஒரு சைக்கோ..பொறுத்துக்கொள்ள முடியவில்லை - வேதனையில் பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி

Gautami Tamil Cinema Divorce
By Sumathi 1 மாதம் முன்
345 Shares

பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி வாழ்வில் நடந்த மோசமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.

வைக்கம் விஜயலக்ஷ்மி

மலையாளத்தில் பிருத்விராஜ் நடித்த செல்லுலாய்டு என்கிற படத்தில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான வைக்கம் விஜயலக்ஷ்மி. அதன்பின் குக்கூ படத்தில் கோடையில மழை போல பாடல் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அவர் ஒரு சைக்கோ..பொறுத்துக்கொள்ள முடியவில்லை - வேதனையில் பாடகி வைக்கம் விஜயலக்ஷ்மி | Singer Vaikom Vijayalakshmi Opens Up Divorce

தொடர்ந்து, சொப்பன சுந்தரி பாடல் மூலம் பிரபலமாகி ரசிகர் பட்டாளத்தைச் சேர்த்தார். இவருக்கு 2016ல் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதன்பின் மணமகன் ஏராளமான நிபந்தனைகள் போடுவதாக கூறி திருமணத்தை நிறுத்தினார்.

திருமணம்

அதனையடுத்து, 2018ல் இன்டீரியர் டெகரேடரும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டுமான அனூப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடால் விவாகரத்து ஆனது. இந்நிலையில், சினிஉலகத்தில் யூடியூபில் வரும் ஸ்பெஷல் நிகழ்ச்சியான மனிதி வா என்ற நிகழ்ச்சியில்,

என்னை திருமணம் செய்த நபர் சேடிஸ்ட் என்பது போகப்போகத்தான் தெரியவந்தது. எப்போதுமே என்னுடைய குறைகளை மட்டுமே சுட்டிக் காட்டுவதை முழுநேர பணியாக வைத்திருந்தார். என்னை மட்டுமே நம்பி இருந்த என் பெற்றோரை என்னிடமிருந்து பிரித்தார்.

விவாகரத்து 

அதையெல்லாம் விட எனது பாடல் தொழிலை மேற்கொள்வதற்கு பல நிபந்தனைகளை விதித்தார். ஒரு கட்டத்திற்கு மேல் என்னால் அவற்றை சகித்துக் கொள்ள முடியவில்லை. நான் எப்போதுமே பாடல்களுக்கு முன்னுரிமை தருபவள். அதனால் சந்தோஷத்தையும் தொலைத்து விட்டு,

பாடல்கள் இல்லாத ஒரு வாழ்க்கையை நடத்த நான் விரும்பவில்லை. உங்களுக்கு பல்வலி என்றால் அதை பொறுத்துக் கொள்ள முயற்சிப்பீர்கள். அதுவே ஒரு அளவுக்கு அதிகமானால் அதை எடுப்பதை தவிர வேறு வழி இல்லை" எனக் கூறியுள்ளார்.