மேடையிலே ரசிகைக்கு உதட்டில் முத்தமிட்ட பிரபல பாடகர் - வைரலாகும் வீடியோ

Viral Video Tamil Singers
By Karthikraja Feb 01, 2025 04:30 PM GMT
Report

பாடகர் உதித் நாராயணன் மேடையில் ரசிகைகளுக்கு முத்தமிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உதித் நாராயணன்

பிரபல பாடகரான உதித் நாராயணன்(69) தமிழில் மட்டுமல்லாமல் கன்னடம், ஹிந்தி, பெங்காலி, தெலுங்கு என பல்வேறு மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். 

udit narayan latest viral image

இவர் 4 தேசிய விருதுகளை பெற்றுள்ளதோடு, பத்மஸ்ரீ, பத்மபூசன் உள்ளிட்ட இந்தியாவின் உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

ரசிகர்களுக்கு முத்தம்

இந்நிலையில், அவர் நடத்தும் இசைக்கச்சேரி ஒன்றில் ரசிகைக்கு அவர் முத்தமிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி கடும் கண்டனத்தை குவித்து வருகிறது. அந்த வீடியோவில் இசை கச்சேரி ஒன்றில் உதித் நாராயணன் ‘டிப் டிப் பர்ஸா பானி’ என்ற பாடலை பாடிக்கொண்டுள்ளார். 

udit narayan kiss video

அப்போது மேடையின் கீழ் இருந்த ரசிகை ஒருவர் அவரிடம் செல்ஃபி கேட்கிறார். உதித் நாராயணன் செல்ஃபி க்கு போஸ் கொடுக்கும் போது அந்த ரசிகை உதித்தின் கன்னத்தில் முத்தமிடுகிறார். உடனே உதித், அந்த ரசிகையின் தலையை திருப்பி அவரின் உதட்டில் முத்தமிடுகிறார். 

மேலும், சில ரசிகைகள் செல்ஃபி கேட்கும் போது அவர்களின் கன்னத்தில் உதித் நாராயணன் முத்தமிடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் உதித்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது AI மூலமாக உருவாக்கப்பட்ட போலி வீடியோவாக இருக்க வேண்டும் என சிலர் கூறுகின்றனர்.

விளக்கம்

இந்த முத்த சர்ச்சைக்கு விளக்கமளித்துள்ள உதித் நாராயணன், "இது ஒரு தன்னிச்சையான தருணம். நான் கிட்டத்தட்ட 46 வருடங்களாக பாலிவுட் துறையில் இருந்து வருகிறேன். ரசிகர்களை வலுக்கட்டாயமாக முத்தமிடுவது என்னுடைய பழக்கம் கிடையாது. 

உண்மையில் ரசிகர்கள் என் மீது அன்பைப் பொழியும்போது நான் என்னுடைய கைகளை மடக்கி வைத்துக் கொள்கிறேன். மேடையில் இருக்கும் போது நான் அவர்களை கைகூப்பி வணங்குவேன்" என கூறியுள்ளார்.