மறைந்த பாடகர் எஸ்.பி.பி நினைவு நாளையொட்டி வெளியாகும் ரஜினியின் 'அண்ணாத்த' முதல் பாடல்
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இறப்பதற்குமுன் கடைசியாக 'அண்ணாத்த' படத்தில் பாடிய பாடலை அவரது நினைவு தினத்தையொட்டி படக்குழு வெளியிட திட்டமிட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பலனளிக்காமல் கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி உயிரிழந்தார்.
அவர், இறப்பதற்குமுன் கடைசியாக ரஜினியின் 'அண்ணாத்த' படத்தில்தான் பாடல் பாடியிருந்தார். இதனை, இசையமைப்பாளர் இமான் 'கடைசிப்பாடலை 'அண்ணாத்த' படத்திற்காக எனது இசையில் எஸ்.பி.பி பாடியது ஆசிர்வாதம்' என்று குறிப்பிட்டார்.

பாடலாசிரியர் விவேகாவும் 'அண்ணாத்த' பாடல் பதிவின் புகைப்படங்களைப் பகிர்ந்து 'எஸ்.பி.பியின் கடைசி பாடல்' என்று அஞ்சலி தெரிவித்தார். இந்த நிலையில், வரும் செப்டம்பர் 25 ஆம் தேதி எஸ்.பி.பி நினைவு தினத்தையொட்டி 'அண்ணாத்த' படத்தின் முதல் பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
ரஜினிக்கு ஓப்பனிங் பாடலை பாடியிருக்கிறார் எஸ்.பி.பி. இதற்கான அறிவிப்பு அடுத்த வாரத்தில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. எஸ்.பி.பி கடைசியாக ரஜினிக்கு ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான 'தர்பார்' படத்தில் 'சும்மா கிழி' பாடலை அனிருத்துடன் இணைந்து பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு, முன்னதாக, 'தர்பார்' படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி ’சிறுத்தை’சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4-ஆம் தேதி படம் வெளியாகிறது.
அரசுக்கு ரூபா 800 மில்லியன் இழப்பு : அர்ஜூன மற்றும் அவரது சகோதரருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் IBC Tamil
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan