அறிவு இல்லாதவங்க.. அத போடுறது என் விருப்பம் - கடுப்பான சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி!

Jiyath
in பிரபலங்கள்Report this article
தனக்கு வந்த மோசமான கமெண்டுகளுக்கு சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி பதிலடி கொடுத்துள்ளார்.
ராஜலட்சுமி
சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி. நாட்டுப்புற பாடகர்களான இவர்கள், அந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து தற்போது சினிமாவில் பாடி வருகின்றனர்.
இதில் பாடகி ராஜலட்சுமி லைசென்ஸ் என்ற படத்தில் நடித்து கதாநாயகியாகவும் அறிமுகமாகியுள்ளார். செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி யூடியூப் சேனல் ஒன்றையும் வைத்துள்ளனர்.
அண்மையில் அந்த சேனலில் அமெரிக்காவில் பனிப்பொழிவு வீடியோ வெளியிட்டிருந்தனர். அதில் ராஜலட்சுமி அமெரிக்காவில் வசிக்கும் ஒரு இளைஞருடன் ஆங்கிலத்தில் உரையாடியிருந்தார். மேலும், எப்போதும் சேலையில் இருக்கும் ராஜலட்சுமி அந்த வீடியோவில் ஜீன்ஸ் பேன்ட்- சர்ட்டில் இருந்தார்.
பதிலடி
இதனால் அவரின் உடை குறித்து நெட்டிசன்கள் மோசமான கமென்ட்டுகளை பதிவிட்டிருந்தனர். இதற்கு பதிலடி கொடுத்த ராஜலட்சுமி "ஆங்கிலம் மீது எனக்கு ஆசை இருந்தது. அதை கற்றுக் கொள்ள விரும்பினேன்.
அதனால் நான் கொஞ்சம் கொஞ்சமாக கற்று வருகிறேன். ஆங்கிலத்தை நமக்குள்ளேயே பேசாமல் பொது இடங்களில் பேசினால் தவறுகள் தெரியவரும் என்பதால் நான் அந்த வீடியோவில் பேசினேன். அதற்கு மோசமாக கமென்ட் போட்டுட்டு இருக்காங்க, அடிப்படை அறிவு இல்லாதவங்கத்தான் இப்படி பேசுவாங்க.
என்னோட உடை குறித்தும் பேசி இருந்தாங்க. எது எனக்கு சரியா இருக்கோ அதை நான் போடுறேன். அதுல என்ன இருக்கு? எனக்குன்னு ஒரு சுய ஒழுக்கம் இருக்கு, அதை நான் கடைப்பிடிப்பேன், அந்த கமென்ட்டுகளை பார்த்துவிட்டு நான் அதே உடையில் நிறைய வீடியோக்களை பதிவிட்டேன்" என்றார்.