ஆண்களும் தான் ஓடுறோம்...நாங்க பெண்களும் தான் ஓடுறோம் - கலைஞர் நுாற்றாண்டு மாரத்தான் போட்டியை VIBE ஆக்கிய ராஜலட்சுமி
கலைஞர் நுாற்றாண்டு மாரத்தான் போட்டியில் தமிழகம் உள்பட வெளிநாட்டினர் பலரும் பங்கேற்ற போட்டியை தங்களது பாடல்கள் மூலம் செந்தில் - ராஜலட்சுமி ஜோடி VIBE செய்தது.
கின்னஸ் சாதனை
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டமாகதிமுக சார்பில் கலைஞர் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று நடைபெற்றது.
கலைஞர் நூற்றாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, 42 கி.மீ., 21 கி.மீ., 10 கி.மீ., 5 கிலோ மீட்டர் என பல பிரிவுகளாக மாரத்தான் போட்டி இன்று சென்னையில் நடத்தப்பட்டது.
கலைஞர் நினைவிடம் அருகில் தொடங்கிய இந்த போட்டி சென்னை தீவுத்திடலில் முடிவடைந்தது. மாரத்தான் போட்டியில் 73,206 பேர் கலந்து கொண்டதால் இந்த போட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
அரசு அதிகாரிகள், திருநங்கைகள், ஆண்கள், பெண்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்று ஓடியுள்ளனர் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
VIBE ஆன மாரத்தான்
இந்த போட்டியில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த துாதர்கள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த போட்டியில் கிராமிய பாடகர்களான செந்தில் - ராஜலட்சுமி தம்பதியின் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் இவர்கள் பாடல்களை பாடி அனைவரையும் ஈர்த்தனர்.
விழாவிற்கு வந்த பல வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தலைகள் அசைத்தபடி ரசித்தனர்.
மாரத்தான் போட்டியில் பங்கேற்க வந்த அனைவரும் நடனமாடியதால் அந்த இடமே நடனத்தால் VIBE ஆனது.