பிரபல திரைப்பட பாடகர் காலமானார் : சோகத்தில் திரையுலகம்
பிரபல பின்னணி பாடகர் பம்பா பாக்யா மாரடைப்பால் இன்று காலமானார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ராவணன்' படத்தில் இருந்தே பாடகராக பம்பா பாக்யா அறிமுகமானார்.
புள்ளினங்காள்
எந்திரன் 2.0 படத்தின் 'புள்ளினங்காள்', சர்கார் படத்தின் 'சிம்ட்டாங்காரன்', பிகில் படத்தின் 'காலமே', என பல ஹிட் பாடல்களைப் பம்பா பாடியுள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் 'பொன்னி நதி' பாடலை பம்பா பாக்யா பாடி இருந்தார்.
இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக பம்பா பாக்யா காலமானதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னை பாடியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்கள் சோகம்
உலகப் புகழ்பெற்ற பம்பா எனும் இசைக்கலைஞரைப்போல் இவரின் இசை ஞானம் இருப்பதால் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமானே இவருக்குப் பம்பா எனப் பெயர் வைத்தார். இந்த நிலையில் இவரின் மறைவு அனைவரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
பம்பா பாக்யா மறைவுக்குத் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.