பிரபல பாடகி பி சுசீலா மருத்துவமனையில் அனுமதி - என்ன பிரச்சனை?
பிரபல பாடகி பி சுசீலா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பி சுசீலா
88 வயதான பி.சுசீலா தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக திகழ்ந்தவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்படப் பல இந்திய மொழிகளில் நாற்பதாண்டுகளாக 25,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். சிறந்த பின்னணி பாடகிக்கான முதல் தேசிய விருதை வென்ற பாடகி என்ற பெருமையை பெற்றவர் இவர்.

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை ஆனந்தா சாலையில் உள்ள இல்லத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் பி.சுசீலா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டிஸ்சார்ஜ்
வயது முதிர்வு மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ள அவர் நலமாக உள்ளதாகவும்,, நாளை மறுநாள் டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பி சுசீலாவின் உடல்நல குறைவு பற்றி அறிந்த ரசிகர்கள், அவர் உடனடியாக குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்ய தொடங்கி உள்ளனர்.
ஞானசாரதேரருக்கு பொதுமன்னிப்பு : நான் தவறாக வழி நடத்தப்பட்டேன் :மன்னிப்பு கோரினார் மைத்திரி IBC Tamil
ராஜபக்சர்களால் விடுதலைப் புலிகளின் 110 கிலோ தங்கம் கொள்ளை! ஷிரந்தியின் பெயரை பகிரங்கப்படுத்திய பொன்சேகா IBC Tamil