மன அழுத்தத்தால் தற்கொலை செய்துக் கொண்ட பிரபல பாடகி - ரசிகர்கள் அதிர்ச்சி

By Petchi Avudaiappan May 03, 2022 06:57 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

புகழ்பெற்ற ஹாலிவுட் பாடகி நியோமி ஜட் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவை சேர்ந்த பிரபல பாடகி பாடகி நியோமி ஜூட் சில திரைப்படங்களில் நடித்தும், பல டிவி சேனல்களின் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றும் ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமானார். 

 5 முறை சிறந்த பாடகிக்கான கிராமி விருது பெற்ற அவர்  76 வயது ஆன நிலையில் மனநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது குடும்பத்தினர் பாதுகாத்து வந்தனர். இதனிடையே நியோமி மன அழுத்தத்தால் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

நியோமி ஜூட்டின் மரணத்திற்கு இசை பிரபலங்களும், சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் நியோமி மரணம் குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் வெளியிடப்படாது என்றும் அவரது கணவரும் சக பாடகருமான லாரி ஸ்டிக்லான்ட் தெரிவித்துள்ளார்.