இளையராஜா அதை செய்தார்; இந்த நிலைமையே அவராலதான் - கதறி அழுத மனோ!
இசையமைப்பாளர் இளையராஜா குறித்து பாடகர் மனோ பேசியுள்ளார்
பாடகர் மனோ
இந்திய சினிமாவில் முன்னணி பாடகராக இருப்பவர் மனோ. பாடகராக மட்டுமல்லாமல் டப்பிங் கலைஞராகவும் நடிகராகவும் இருந்துள்ளார். இதுவரை 35,000 பாடல்களுக்கு மேல் அவர் பாடியுள்ளார்.
இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ராக் ஸ்டார் மனோ என்ற தலைப்பில் இந்த வாரம் பாடல் சுற்று நடைபெறுகிறது. இதில் சிறப்பு விருந்தினராக மனோ கலந்து கொண்டுள்ளார்.
இளையராஜா
அப்போது இசையமைப்பாளர் இளையராஜா குறித்து அவர் பேசியுள்ளார். மனோ கூறியதாவது "என்னுடைய இந்த 40 வருட பயணத்திற்கு இசை பிச்சை போட்டவர் இசைஞானி இளையராஜா தான்.
உங்களுக்கு எப்படி நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை. ஐ லவ் யூ சார்.." என்று கண்கலங்கி அழுதுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.