மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல்

death singer Legislators Mourning லதா மங்கேஷ்கர் இரங்கல் lata-mangeshkar மறைவு சட்டப்பேரவை
By Nandhini Mar 21, 2022 05:46 AM GMT
Report

கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் சமீபத்தில் உயிரிழந்தார்.

92 வயதான அவர் சுமார் 20 நாட்களுக்கு மேலாக கொரோனா தொற்று காரணமாக மும்பை ப்ரீச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல் உறுப்புக்கள் செயலிழந்த நிலையில் உயிரிழந்த லதா மங்கேஷ்கரின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

அவரின் மறைவிற்கு தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு, 2 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

20-க்கும் அதிகமான மொழிகளில் 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ள லதா மங்கேஷ்கர் கடந்த 2001ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அவருக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மறைந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவிற்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் | Singer Lata Mangeshkar Mourning Legislators