பிரபல பாடகர் கே.கே-வின் உடல் தகனம் - ரசிகர்கள் கண்ணீர்
பிரபல பின்னணிப் பாடகர் கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பு காரணமாக நேற்று முன்தினம் காலமானார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்த அவர், உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கேகே இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இவர் 66-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இந்த நிலையில் கேகே வின் உடலுக்கு நேற்று கொல்கத்தாவில் உள்ள ரபீந்திர சதனில் வைக்கப்பட்டு இருந்த பாடகர் கே.கே.வின் உடல். கே.கே. உடலுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரில் அஞ்சலி செலுத்தினார்.
#WATCH | The mortal remains of singer #KK are being taken to Mumbai's Versova crematorium for last rites. pic.twitter.com/XZqHsrtfXE
— ANI (@ANI) June 2, 2022
கே. கே உடலுக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதை அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவரின் உடல் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து நேற்று இரவு மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் மும்பையில் உள்ள வெர்சோவா தகன மையத்தில் கே.கே-வின் உடல் இன்று மலை 2:50 போல தகனம் செய்யப்பட்டது.