பிரபல பின்னணி பாடகர் கேகே மரணம் இயற்கைக்கு மாறானது என வழக்குப்பதிவு..!

India
By Thahir Jun 01, 2022 06:39 AM GMT
Report

பிரபல பாடகரான கிருஷ்ணகுமார் குன்னத் என்ற கேகே உயிரிழப்பு இயற்கைக்கு மாறானது என காவல்துறை வழக்கு பதிவு.

நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். 52 வயதான பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் என்ற கேகே தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்.

பிரபல பின்னணி பாடகர் கேகே மரணம் இயற்கைக்கு  மாறானது என வழக்குப்பதிவு..! | Singer Kk S Death Is Prosecuted As Unnatural

1990களில் அவர் பாடிய பால் மற்றும் யாரோன் போன் பாடல்கள் மிகவும் பிரபலமானது. இவர் தமிழில் கில்லி,தாமிரபரணி,ஆடுகளம்,ஐயா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் பாடியுள்ளார்.

இந்நிலையில் இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு பின்னர் தங்கியிருந்த ஹோட்டலின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறினர். இந்த நிலையில் கொல்கத்தா நியூ மார்கெட் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கேகே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அவரின் மரணம் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளோம்.அவரின் மரணம் இயற்கைக்கு மாறானது என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர் தங்கயிருந்த ஹோட்டல் அறையின் சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். கேகேவின் மரணம் இயற்கைக்கு மாறானது என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரின் மரணத்தில் மர்மம் இருக்கா என ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.