Thursday, Jul 17, 2025

ஆடிட்டோரியத்தை விட்டு வெளியேறும் போது பாடகர் கே.கே. கடைசி நிமிடம் - வைரலாகும் வீடியோ - ரசிகர்கள் கண்ணீர்

Viral Video
By Nandhini 3 years ago
Report

நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 10 மணி நேரத்திற்கு முன்பு கொல்கத்தா ஆடிட்டோரியத்தில் நடந்த இசை நிகழ்ச்சியின் காட்சிகள் உள்ளது.

52 வயதான பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் என்ற கேகே தமிழ்,தெலுங்கு,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். 1990களில் அவர் பாடிய பால் மற்றும் யாரோன் போன் பாடல்கள் மிகவும் பிரபலமானது.

இவர் தமிழில் கில்லி,தாமிரபரணி,ஆடுகளம்,ஐயா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் பாடியுள்ளார். நேற்று இவர் கொல்கத்தாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சிக்கு பின்னர் தங்கியிருந்த ஹோட்டலின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறினர்.

தற்போது, சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நேரடி நிகழ்ச்சியின் போது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து கே.கே வெளியே அழைத்துச் செல்லப்பட்டார், அதன் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஆடிட்டோரியத்தை விட்டு வெளியேறும் போது கே.கேவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை இந்த வீடியோவில் தெளிவாகக் காணலாம்.