தற்கொலை முயற்சியா?பாடகி கல்பனா வெளியிட்ட திடீர் வீடியோ - வைரல்!
பிரபல பின்னணிப் பாடகி கல்பனா ராகவேந்தர் பேசியுள்ள வீடியோ இனையத்தில் வைரலாகி வருகிறது.
பாடகி கல்பனா
பின்னணிப் பாடகரும், நடிகரும் இசையமைப்பாளருமாவார். டி.எஸ். ராகவேந்திராவின் மகளான கல்பனா, தமிழ், தெலுங்கு என ஆயிரத்து ஐநூறுக்கு மேற்பட்ட திரைப்படத்தில் பாடலை பாடி உள்ள இவர், கிட்டத்தட்ட 3,000 மேடைகளில் பாடியுள்ளார்.
தற்பொழுது ஐதராபாத்தில் உள்ள நிஜாம்பேட்டையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வரும் நிலையில் கல்பனாவின் வீட்டுக் கதவு 3 நாட்களாக மூடப்பட்டு, கதவு திறக்காமலே இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த குடியிருப்பு வாசிகள் போலீசிற்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து,
சுயநினைவு இல்லாமல் இருந்த கல்பனாவை போலீசார் மருத்துவமனையில அனுமதித்தனர்.இதனை தொடர்ந்து சோசியல் மீடியாவில் பாடகி கல்பனா குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக செய்திகள் பரவியது. இதற்கு பாடகி கல்பனா விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் பேசியுள்ளதாவது: நான், இந்த வயசுல பிஎச்டி, எல்எல்பி என நிறைய விஷயங்களை பண்ணிக்கிட்டு இருக்கேன், அதுமட்டுமில்லாமல், என்னுடைய இசை துறையின் மீதும் நான் ரொம்ப நம்பிக்கை வைத்திருக்கிறேன்.இதனால எனக்கு நிறைய மன அழுத்தங்கள் இதனால கடந்த சில ஆண்டுகளாகவே நான் சரியா தூங்கல.
வீடியோ
தூங்க முடியாதா பிரச்சனையால் நான் அவதிப்பட்ட போது , நான் டாக்டரிடம் சென்றேன். அவர், இது இன்ஃபோமேனியா என்று அதற்கு, டாக்டர்கள் சில மருந்துகளை எனக்கு கொடுத்திருந்தார்.அந்த மெடிசன்னோட அளவு கொஞ்சம் அதிகமாகி விட்டது. நான் தூங்க எட்டு மாத்திரைகளை எடுத்துக் கொண்டேன். ஆனால் அது உதவவில்லை.
#singerkalpana pic.twitter.com/ZatyUvPuik
— Vinaykumar Nerella (@vinayN95) March 7, 2025
இதனால் நான் மேலும் 10 மாத்திரைகளை உட்கொண்டதால் அது என்னுடைய நுரையீரலை பாதித்து விட்டதால், நான் சுயநினைவை இழந்து விட்டேன். எனக்கும் என் கணவருக்கோ எந்தவிதமான கருத்து வேறுபாடு இல்லை.
எனக்கு ரொம்ப நல்ல கணவர் கிடைச்சிருக்காரு என்று கூறியவர் என் கணவர் குறித்தும் தவறான வதந்திகளை பரப்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.