போர்வையை விலக்கி விட்டு.. வீட்ல இதுதான் பிரச்சனை -மீட்டில் வெடித்து சீறிய கல்பனா!
தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல் வெளியான நிலையில் பாடகி கல்பனா விளக்கம் அளித்துள்ளார்.
தற்கொலை?
திரைத்துறையில் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கல்பனா. தற்போது சில சேனல்களில் பாட்டு போட்டிகளிலும் நடுவராக பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஹைதராபாத்தில் உள்ள வீட்டில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை எடுத்து கொண்டதால் படுக்கையறையில் மயங்கி கிடந்தார். இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தொடர்ந்து தான் தூக்க மாத்திரை எடுத்து கொண்டது ஏன் என்பது குறித்து வீடியோ வெளியிட்டு வந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சென்னையில் சந்தித்துப் பேசினார். அப்போது ஒரு நல்ல செய்தி 100 பேரிடம் சேர்கிறது என்றால் கெட்ட செய்தி ஆயிரம் பேரை சேருகிறது.
கல்பனா விளக்கம்
தனக்கு நுரையீரல் பிரச்சனை இருப்பதாகவும், பல வருடங்களாக உடல் ரீதியான பிரச்சனை இருப்பதால் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டு வந்ததாகத் தெரிவித்தார். இந்த சூழலில் தான் திரைத்துறையையும் பட்டப்படிப்பையும் கவனித்து வருவதாகத் தெரிவித்தார்.
மேலும் இதன் காரணமாகத் தான் அதிக டோஸ் மாத்திரை எடுத்துக் கொண்டதால் மயக்கம் வந்து விட்டது என்று கூறினார். தொடர்ந்து பேசியவர் சினிமாக்காரர் என்பதால் தன் மீது சேற்றை வாரி அடிக்கிறார்கள் எனவும் தான் மயங்கி நிலையிலிருந்த போது கூட போர்வையை விலக்கி விட்டு போட்டோ எடுத்ததாகக் குற்றம்சாட்டினார்.
மேலும் ஒரு பெண் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பல பிரச்சினைகளைச் சுமந்து கொண்டிருக்கிறார் என்பதை யாரும் புரிந்து கொள்ளவே இல்லை என்று வேதனை தெரிவித்தார்.