குரலை இனிமையாக்க பாம்பின் விந்தணுவை குடிக்கும் பிரபல பாடகி
குரலை இனிமையாக்க பாம்பின் விந்தணுவை குடிக்க வேண்டுமென பாடகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜெசிகா சிம்ப்சன்
44 வயதான ஜெசிகா சிம்ப்சன், அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகை மற்றும் முன்னணி பாடகி ஆவார்.
குரலை இனிமையாக்க பாம்பின் விந்தணுக்கள் அடங்கிய சீன மூலிகை காக்டெயிலை குடிப்பதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
பாம்பின் விந்தணு
இது தொடர்பாக ஜெசிகா சிம்ப்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் ஜெசிகா பாட்டிலில் ஒன்றை குடிப்பார். அது என்னவென்று அருகில் இருந்தவர்கள் கேட்ட போது, "இது சீன மூலிகை காக்டெய்ல். குரலை இனிமையாக்க எனது பயிற்சியாளர் இதை குடிக்க சொன்னார்" என கூறினார்.
மேலும், "இது குறித்து நான் கூகிளில் தேடிப்பார்த்து போது, இதில் பாம்பின் விந்தணு கலந்திருப்பது தெரிய வந்தது. இது ஒரு இனிமையான பானம்.
நல்ல குரல் வளம் வேண்டுமானால் பாம்பின் விந்தணுக்களை குடிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.