"காதல் பாடலுக்கு உயிரூட்டிய ஜானகியின் சொல்லாத காதல்"!! இப்படி ஒரு விதியா..?
பிரபல பின்னணி பாடகி ஜானகியின் பாடல்களை குறித்து நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை.
ஜானகி
இளையராஜாவின் இசையில் பல பாடல்களை பாடி அசத்தியவர் ஜானகி. ரசிகர்கள் அன்போடு ஜானகி அம்மா என்ற அழைக்கப்படும் இவர் தனது கிட்டத்தட்ட 25 ஆண்டுக்கால சினிமா வாழ்க்கையில் தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்லாமல் கொங்கணி, துளு, சௌராஷ்டிரா, ஹிந்தி, வங்காளம், சமஸ்கிருதம், சிங்களம், ஆங்கிலம் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இளையராஜாவின் முதல் படமான "அன்னக்கிளி" திரைப்படத்தில் "அன்னக்கிளியே உன்னைத் தேடுதே" என்ற பாடல் இவரை பெரும் புகழ் உச்சத்திற்கு கொண்டு சென்றது. தொடர்ந்து பல காதல் பாடி, காதலுக்கு உயிருட்டியுள்ள ஜானகி அம்மாவின் காதல் கதை குறித்த செய்தி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
காதல் கதை
ஜானகி ஆரம்ப காலகட்டத்தில் மேடை பாடகியாக இருந்தபோது ராம் பிரசாத் என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது. இந்த ராம் பிரசாத் ஜானகி அப்போது கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவரின் மகன். இசைக்கச்சேரிகளில் இருக்கும் போது ஜானகியிடம் கச்சேரிகளை தாண்டி சினிமாவில் பாட வைக்கவேண்டும் என பலரிடமும் ஜானகி குறித்து பேசி வருவாராம். அவரோட அறிவுறுத்தலின் பேரில் தான் சென்னைக்கு வந்து ஜானகி ஏவிஎம் நிறுவனத்தில் பாடகியாக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.
தன்னுடைய இசைப்பயணம் துவங்க காரணமாக இருந்த ராம் பிரசாத் மீது அப்போதே காதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் நட்பு இருந்த பழக்கம் பிறகு காதலாக மாறியிருக்கின்றது. ஆனாலும் தன்னுடைய காதலை ஜானகி வெளிப்படுத்தவே இல்லையாம். இங்கு தான் நாம் கடவுளின் என்ற சக்தியை நம்பும் செயல் ஒன்று நடந்துள்ளது.
சொல்லாமலே இருந்த ஜானகியின் காதலை அவர்களாகவே பெற்றோர்கள் திருமணத்தில் முடித்துள்ளனர்.
ஜானகிக்கும் ராம் பிரசத்திற்கும் கடந்த 1959 ஆம் ஆண்டு திருமணம் செய்து நடந்தது குறிப்பிடத்தக்கது. ஜானகி- ராம் பிரசாத் தம்பதிகளுக்கு முரளி கிருஷ்ணா என்ற ஒரே ஒரு மகன் உள்ளார். ராம் பிரசாத் கடந்த 1997-ஆம் ஆண்டு மாரடைப்பின் காரணமாக மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.