திருமணம் செய்வதே அதற்காகதான் - சின்மயி ஓபன் டாக்

Marriage Chinmayi Women
By Karthikraja Nov 23, 2024 08:30 PM GMT
Report

திருமணம் குறித்து பிரபல பாடகி சின்மயி பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

சின்மயி

தனுஷ்-ஐஸ்வர்யா, ஏஆர் ரஹ்மான் - சைரா பானு என சினிமா பிரபலங்கள் அடுத்தது விவகாரத்து பெற்று வரும் நிலையில் பாடகி சின்மயி திருமணம் குறித்து பேசிய பழைய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

chinmayi

அந்த பேட்டியில் "ஒரு பெண்ணுக்கான தைரியம், தன்னம்பிக்கை, ஒரு ஆண்னின் காதலின் மூலம் முழுமையாக கிடைக்கிறதா என்ற செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அமைதியான வாழ்க்கை

அதற்கு பதிலளித்த சின்மயி, "ஒரு பெண் நம்மை விட அதிகமாக சம்பாதிக்கிறாள் என்கிற எந்தவிதமான ஈகோவும் இல்லாமல், பொறாமை படாமல், ஒரு ஆண் அமைந்துவிட்டால் அந்த பெண்ணின் வாழ்க்கை ரொம்ப அழகாவும், அமைதியாகவும் இருக்கும். 

chinmayi

என்னுடைய கணவர் என் வாழ்க்கையில் ரொம்ப சப்போட்டா இருக்கிறார். ஆனால் பல பெண்கள் அந்த அமைதி இல்லாமல் திருமணமாகிவிட்டது என்பதற்காக கனவு, ஆசை எல்லாத்தையும் விட்டு கொடுத்துத்தான் வாழ்ந்து வருகிறார்கள்.

காமத்திற்காக திருமணம்

ஒரு குடும்பம் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக, தன்னுடைய ஆசையை புதைத்துக் கொண்டு இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை பெண் ஏன் வாழ வேண்டும் என்பதுதான் என்னுடைய கேள்வி. ஒரு பெண்ணால், ஆண் துணை இல்லாமல் இருக்க முடியாது என்கிற நிலையை உருவாக்கி வைத்துள்ளார்கள். அதற்காக கொண்டு வரப்பட்டதுதான் திருமணம்.

திருமணம் செய்து கொண்ட எத்தனை தம்பதிகள் புரிதல், காதலோடு வாழ்கிறார்கள்? இதில் பாதி பேர் காமத்திற்கான திருமணம் செய்து கொள்கிறார்கள், சிலர் ஏதோ கல்யாணம் செய்து வைத்தார்கள், குழந்தை பெற்றுக்கொண்டோம் என்பதற்காக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்" என பேசியுள்ளார்.