பாலிவுட் பாடகர் வெறிச்செயல்; கேமரா இருந்திருந்தா யோக்கியதை தெரிஞ்சிருக்கும் - கிழித்த சின்மயி!
பணியாளரை தாக்கியது தொடர்பாக பாடகர் ரஹத் ஃபதே அலிகானை, பாடகி சின்மயி கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரஹத் ஃபதே அலிகான்
பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகராக அறியப்படுபவர் ரஹத் ஃபதே அலிகான். பாகிஸ்தானி சேர்ந்த இவருக்கு ஏராளமான ரசிகர்களும் உள்ளனர்.
இந்நிலையில் தனது வீட்டு பணியாளர் ஒருவரை, ரஹத் ஃபதே அலிகான் கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி வைரலானது. அதில், அந்த நபரை சரமாரியாக அடிப்பதோடு, கன்னத்தில் அறைந்தும், காலணியால் தலையிலும் உடலிலும் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளது.
சின்மயி விமர்சனம்
இந்நிலையில் இந்த வீடியோவை குறிப்பிட்டு பாடகி சின்மயி அவரை கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் "இந்த மாதிரியான நபர்களுக்கு பொது இடங்களில் புனிதர்கள் என்கிற பிம்பம் இருக்கிறது.
கேமரா என்ற ஒன்று முன்பே இருந்திருந்திருந்தால் இவர்களின் யோக்கியதை எப்போதோ வெளியே வந்திருக்கும். இது ஒரு குருவுக்கும் சீடனுக்குமான நிலவரம் என்று அவர் குறிப்பிடுகிறார்.
குரு என்கிற பெயரில் இவர்கள் செய்யும் அராஜகங்கள் நியாயப்படுத்தப்படுகின்றன. இவர்களின் படைப்பாற்றல் திறமைகளுக்கு பின்பாக இவர்களின் வன்முறை மனங்கள் ஒளித்து வைக்கப்படுகின்றன” என்று சின்மயி பதிவிட்டுள்ளார்.
Some of these people behave like such gentle, soft spoken souls in public, one would never think they’d be capable of such inhumane behaviour.
— Chinmayi Sripaada (@Chinmayi) January 27, 2024
If only cameras existed earlier - more of those we celebrate as so called greats would have been exposed for what they actually were to… https://t.co/Touh1w7H2X