இதான்.. சமந்தா விவாகரத்துக்கு உண்மையான காரணமா? போட்டுடைத்த சின்மயி!

Samantha Only Kollywood Bollywood Chinmayi
By Sumathi 6 மாதங்கள் முன்

சமந்தா விவாகரத்து குறித்து சின்மயி சில தகவல்கள் தெரிவித்துள்ளார்.

சமந்தா

நாக சைதன்யாவும், சமந்தாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். நான்காவது திருமண நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பு விவாகரத்து குறித்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு வெளியிட்டனர்.

இதான்.. சமந்தா விவாகரத்துக்கு உண்மையான காரணமா? போட்டுடைத்த சின்மயி! | Singer Chinmayi Opens Up About Samantha Divorce

கணவரை பிரிந்த பிறகு பிஸியாகா தனது வேலைகளில் கவனம் செலுத்து வருகிறார். மேலும் முதலில் அமைதியாக இருந்த சமந்தா தற்போது அவரது விவாகரத்து குறித்து மனம் திறந்து பேசி வருகிறார்.

பாடகி சின்மயி 

இந்நிலையில் பாடகி சின்மயி சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “பெண்களுக்கு வீட்டில் உறுதுணையாக இருப்பது கணவரும் கணவர் வீட்டை சேர்ந்தவர்களும்தான். ஆனால் வீட்டில் கணவனைவிட பெண் அதிகமாக சம்பாதிக்கிறார் என்றாலும்,

இதான்.. சமந்தா விவாகரத்துக்கு உண்மையான காரணமா? போட்டுடைத்த சின்மயி! | Singer Chinmayi Opens Up About Samantha Divorce

அதிக பிரபலமாகிறார் என்றாலும் அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வயிற்றெரிச்சல் உருவாகிறது. இதனால் பெண்களுக்கு வீட்டில் நிம்மதி கிடைப்பதில்லை. பெண்கள் எப்போதும் தங்களின் கனவுகளை தொலைத்துவிடும் நிலையில் இருக்கிறார்கள்.

கைத்தட்டி ரசிக்கனும்

அப்படித்தான் இந்திய கலாச்சாரம் உள்ளது. ஆனால், சமந்தாவை பொறுத்தவரை அவர் கடந்து வந்த பாதை, அவருடைய தைரியமும் தன்னம்பிக்கையும் எல்லா பெண்களிடமும் இருக்க வேண்டும்.

சமந்தா ஹாலிவுட்டில் மட்டுமல்ல பாலிவுட்டிலும் பணியாற்ற உள்ளார். சமந்தா இன்னும் உயர வேண்டும், அவர் ஆஸ்கார் பெறுவதை நான் கைத்தட்டி ரசிக்க வேண்டும்” என்றார்.  

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.