தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இல்லையா? கடுப்பான சின்மயி..காட்டமான கேள்வி!

Jiiva Tamil Cinema Sexual harassment Chinmayi
By Swetha Sep 03, 2024 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இல்லை என நடிகர் ஜீவாவின் பேச்சுக்கு சின்மயி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பாலியல் தொல்லை

தேனியில் உள்ள ஒரு ஜவுளிக்கடை திறப்பு விழாவிற்கு நடிகர் ஜீவா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஜவுளிக்கடையைத் திறந்து வைத்துவிட்டு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை நடிகர் ஜீவா சந்தித்தார்.

தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இல்லையா? கடுப்பான சின்மயி..காட்டமான கேள்வி! | Singer Chinmayi Lashes Out At Actor Jiivas Speech

அப்போது கேரளாவில் பூதாகரமாகி வரும் நடிகைகள் பாலியல் புகார் தொடர்பாகக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் ,''கேரளாவைப் போலத் தமிழ்த் திரையுலகில் பாலியல் சர்ச்சை இல்லை எனவும், இந்தக் கேள்விக்கு ஏற்கனவே தான் பதில் அளித்திருப்பதாகக் கூறினார்.

மேலும் நல்ல நிகழ்ச்சிக்கு வந்த தன்னிடம் இது போன்ற அபசகுனமான கேள்விகளைக் கேட்க வேண்டாம் எனக் கூறினார். அப்போது “நீங்கள் நடிகர் என்பதால் தான் கேரளத் திரையுலகில் எழுந்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி கேட்டோம்” என்று செய்தியாளர் கூறினார்.

கேரள பாலியல் சர்ச்சை : உனக்கு அறிவு இருக்கா? செய்தியாளரை ஒருமையில் பேசிய நடிகர் ஜீவா!

கேரள பாலியல் சர்ச்சை : உனக்கு அறிவு இருக்கா? செய்தியாளரை ஒருமையில் பேசிய நடிகர் ஜீவா!

 சின்மயி கேள்வி

இதனால் கோபமடைந்த நடிகர் ஜீவா, “திரும்பத் திரும்ப பதில் சொல்ல முடியாது.. உனக்கு அறிவு இருக்கா?” என ஒருமையில் பேசினார். இதனால் நடிகர் ஜீவாவிடம் செய்தியாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை இல்லையா? கடுப்பான சின்மயி..காட்டமான கேள்வி! | Singer Chinmayi Lashes Out At Actor Jiivas Speech

இந்நிலையில் நடிகர் ஜீவாவின் இந்த பதிலுக்கு பாடகி சின்மயி கோபத்துடன் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிலளித்துள்ளார். தமிழில் பாலியல் சீண்டல்கள் இல்லவே இல்லை என்று அவர்கள் எப்படி கூறுகிறார்கள்,

என்றும் தனக்கு புரியவே இல்லை என்றும் சின்மயி தன்னுடைய பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து சினிமாவில் பல விஷயங்களை கேள்வி எழுப்பி வரும் சின்மயி, இந்த விஷயத்திலும் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.