19 வயசு தான்.. வாடகை வீட்டில் டார்ச்சர்; இவர்கள் தான் என் கற்பை.. சின்மயி வேதனை!
வாடகை வீட்டில் இருந்த போது பல மோசமான அனுபவங்களை தான் சந்தித்ததாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
பாடகி சின்மயி
தமிழ் திரையுலகில் முன்னணி பாடகிகளில் ஒருவராக இருப்பவர் சின்மயி. கன்னத்தில் முத்தமிட்டால் என்ற திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்ற பாடலின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பல திரைப்படங்களில் பாடல்களை பாடி வரும் இவர் சமூக பிரச்சனைகளுக்காகவும், மீ டூ (Me Too) போன்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் குரல் கொடுத்து வருகிறார்.
சின்மயி கலந்து கொண்ட நேர்காணல் ஒன்றில் "சென்னையில் 32 வருடங்களாக நாங்கள் வாழ்ந்து வருகிறோம். அதில் 42 வீடுகள் மாறி இருப்போம். அவ்வளவு மோசமான அனுபவங்கள் எனக்கு நிகழ்ந்து இருக்கின்றன.
முட்டாள்கள்
வாடகை வீட்டில் இருந்த போது பல மோசமான மனிதர்களை நான் சந்தித்து இருக்கிறேன். அவர்கள் ஏன்டா நாம வாழ்கிறோம் என்று நினைக்க வைத்தார்கள். தேவையில்லாமல் அனைத்து விஷயத்திலும் மூக்கை நுழைத்து எனக்கு அறிவுரை கூறினார்கள்.
என்னமோ இவர்கள் தான் என் கற்பை காப்பாற்றுவது போல நடந்து கொண்டார்கள். என் கற்பை எனக்கு பாதுகாத்துக்க தெரியும் என்ற சொல்லக்கூடிய தைரியம் அப்போ எனக்கு இல்லை.
மீ டூ விவகாரம் குறித்து அப்போது சொல்லாமல் இப்போது ஏன் பேசுகிறார் என்று சொல்கிறார்கள். அப்போது எனக்கு 19 வயசு. அந்த வயதில் அந்த தைரியம் எனக்கு இல்லை. 19 வயதில் அதை ஏன் சொல்லவில்லை என்று கேட்பவர்கள் அனைவரும் முட்டாள்கள்" என்று தெரிவித்துள்ளார்.