பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்

Tamil Cinema Death Tamil Singers
By Vinoja Apr 12, 2026 12:17 PM GMT
Report

பழம்பெரும் பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92) உடல் நலக்குறைவு காரணமாக தெற்கு மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

பாடகி ஆஷா போஸ்லேவிற்கு (Asha Bhosle) மாரடைப்பு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் ஏப்ரல் 11 ஆம் திகதி அனுமதிக்கப்பட்ட நிலையில் சிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார் | Singer Asha Bhosle Dies At 92 In Mumbai

நடிகர் ராமராஜனின் செண்பகமே செண்பகமே பாடல்.. நடிகர் ரஜினிகாந்த் - நயன்தாரா நடித்த சந்திரமுகி படத்தில், கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் பாடல் உள்ளிட்டவற்றால் தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடம் பிடித்தவர். தமிழ் உள்பட இந்திய திரையுலகில் 10 ஆயிரம் பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.