நீட் தேர்வுக்கு எதிர்ப்பு.., முதல்வர் விஜய்யை சந்தித்த பாடகர் அறிவு

Vijay TVK
By Yashini Jul 21, 2026 12:23 PM GMT
Report

நீட் தேர்வுக்கு எதிராக முழக்கமிட்டு கைதான நிலையில் முதல்வர் விஜய்யை பாடகர் அறிவு சந்தித்தார்.

நீட் தேர்வு எதிர்ப்பு

டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் கல்வித் துறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

நேற்று மாணவர்கள் மீது தில்லி காவல்துறை தடியடி நடத்தியதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு.., முதல்வர் விஜய்யை சந்தித்த பாடகர் அறிவு | Singer Arivu Meets Cm Vijay In Tn Secretariat

இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பாடகர் அறிவு முழக்கமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தலைமைச் செயலகம் முன்பு இன்று (ஜூலை 21) பிற்பகல் வந்த பாடகர் அறிவு, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டார்.

முதல்வரை சந்தித்த அறிவு

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என முழக்கமிட்டா அவரை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், முதல்வர் விஜய்யை சந்திக்க பாடகர் அறிவுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

காவல்துறை வாகனத்திலேயே அவர் தலைமைச் செயலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

அங்கு முதல்வர் விஜய்யை சந்திக்க அறிவு செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.