சிங்கார சென்னையில் உணவுத் திருவிழா : நீங்க ரெடியா?

Chennai
By Irumporai Aug 10, 2022 06:52 AM GMT
Report

சென்னை தீவுத்திடலில் வரும் 12, 13, 14 ஆகிய தேதிகளில் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. பாரம்பரிய உணவு வகைகளை  அறிந்து கொள்ளும் விதமாக 200 அரங்குகள்  இடம்பெற உள்ளது.

சென்னையில் உணவுத்திருவிழா

சென்னை தீவுத்திடலில் உணவு பாதுகாப்பு துறை சார்பில்  வருகிற ஆகஸ்ட் 12, 13 மற்றும் 14 ஆகிய மூன்று தேதிகளில் உணவு பாதுகாப்பு குறித்தும்  மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவுத் திருவிழா நடைபெற உள்ளது.

சிங்கார சென்னையில்  உணவுத் திருவிழா : நீங்க ரெடியா? | Singara Chennai Food 2022 Starts August 12

200 அரங்கங்கள் 

உணவுத்திருவிழாவுக்கு ‘சிங்கார சென்னையின் உணவு திருவிழா 2022’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திருவிழாவில் திரைக் கலைஞர்கள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர். இதைத் தொடர்ந்து, இந்தத் திருவிழாவில் பாரம்பரிய உணவுகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் விதமாக 200 அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளது.

மேலும், சமையல் கலைகள் பற்றிய விரிவான பரிந்துரைகள், பாரம்பரிய உணவு வகைகள்,  உணவு சார்ந்தப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் போன்றவையும் நடைபெற உள்ளது.

பல்வேறு நிகழ்ச்சிகள்

குறிப்பாக, 1200 குழந்தைகளுக்கு அடுப்பில்லாமல் எவ்வாறு சமைப்பது என்பதை கற்றுக்கொடுத்தல், எந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படிப்பட்ட உணவுகள் எடுத்துக் கொள்ளக்கூடாது, உணவு வீணாவதை எப்படி தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல அம்சங்கள் நிறைந்த நிகழ்வாக இந்த உணவு திருவிழா நடைபெற உள்ளது.

சிங்கார சென்னையில்  உணவுத் திருவிழா : நீங்க ரெடியா? | Singara Chennai Food 2022 Starts August 12

மேலும், உணவுத் திருவிழாவின் இறுதி நாளான ஆகஸ்ட் 14-ம் தேதி உணவு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே சென்னையில் நடக்க உள்ள உணவுத்திருவிழாவில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதீஸ்குமார் அழைப்பு விடுத்துள்ளார். அனைவருக்கும் அனுமதி இலவசம் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.